பரந்தன் விபத்தில் ஆறு பேர் காயம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்தொன்று பரந்தன் பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் சாரதி உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்து பரந்தன் சந்தியில் பயணித்த போது, முல்லைத்தீவில் இருந்து வந்த பாரவூர்தியொன்று பிரதான வீதிக்கு நுழைய முற்பட்ட நிலையில், பேருந்தின் சாரதி விபத்தை தடுப்பதற்காக பேருந்தை மறுபுறத்திற்கு திருப்ப முற்பட்டதால் வீதிக்கு அருகில் இருந்த மரத்துடன் மோதியுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.
விபத்து தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
77,222 பேருக்கு டெங்கு நோய் தொற்று!
கைகலப்பு: கால வரையறையின்றி மூடப்படும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்!
அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து - ‘லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்லுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் ...
|
|
பிரபாகரனது மரணம் தொடர்பில் பொய்மையை பாதுகாப்பதற்கே சிவாஜிலிங்கம் முனைகிறார் – ஈ.பி.டி.பியின் யாழ் மா...
ஒக்டோபர் முதலாம் திகதிமுதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனை...
பாடசாலைகளில் முதலாம் தரத்தில் இணைத்துகொள்ளும் சிறுவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது - கல்வி ...