பயன்படுத்தி விட்டு அகற்றப்படும் முகக் கவசங்களை வீதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் வீச வேண்டாம் – மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை!

Friday, October 23rd, 2020

பயன்படுத்தி விட்டு அகற்றப்படும் முகக் கவசங்களை வீதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் வீச வேண்டாம் என பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிலர் முகக் கவசங்களை அணிந்து விட்டு அதனை பாதுகாப்பற்ற முறையில் வீதியோரங்களில் வீசிச் செல்வதால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தமக்கு முறைப்பாடு செய்துவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நீக்கப்படும் முகக் கவசங்களை பாதுகாப்பான முறையில் குப்பை தொட்டியில் அல்லது உரிய இடத்தில் போடுமாறும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை சுகாதார முறையில் அகற்றாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: