பத்து புதிய சட்டத்தரணிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பத்து புதிய சட்டத்தரணிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்துள்ளார்.
அவர்கள் விரைவில் உயர் நீதிமன்றத்தின் சம்பிரதாய அமர்வைத் தொடர்ந்து பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பதவிப்பிரமாணத்தின் பின் அவர்கள் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள்.
அதனடிப்படையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக சமந்த வீரகோன், கலாநிதி அசங்க குணவன்ச, மொஹமட் அடமலி, ஹர்ஷ பெர்னாண்டோ, கலாநிதி சிவாஜி பீலிக்ஸ், பைசா மார்க்கர், கௌசல்யா நவரத்ன, உபுல் குமாரப்பெரும, விரான் கொரியா மற்றும் எராஜ் டி சில்வா ஆகியோர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கையின் புதிய வரைபடம் வெளியீடு!
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு!
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - வடமாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனியை அனுப்புவதற்கு அமைச்சர் நளின் பெ...
|
|