பதிவுசெய்வதற்காக 38 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!
Wednesday, March 10th, 2021
தற்போதுவரை 38 அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் மாத்திரம் 158 அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருந்ததாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரான நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், புதிய நெறிமுறைகள் முன்வைக்கப்பட்டதை அடுத்து, அந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விண்ணப்பங்கள், அடிப்படை தகைமைகளின்படி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்ததன் பின்னர், நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாட்டில் இதுவரையில், 76 அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


