கணக்காய்வுத் திணைக்களத்திற்குப் பதில் கணக்காய்வு அலுவலகம்!

Tuesday, July 10th, 2018

கணக்காய்வுத் திணைக்களத்திற்குப் பதிலாக அரசாங்கத்தின் கணக்காய்வு அலுவலகம் அமைக்கப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக, திணைக்களத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் பணிகளும் வளங்களும் பணியாளர்களும் அரச கணக்காய்வாளர் அலவலகத்திற்கு உள்வாங்கப்படுவர். கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
புதிய சுற்று நிருபம் தயாரிக்கப்பட்டு இவை சட்டமாக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த அனைத்துப் பணிகளும் 5 மாத காலப்பகுதியில் முழுமைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. புதிய அரச கணக்காய்வாளர் அலுவலகத்தின் மூலம் அரச சேவை பணிகளை மேம்படுத்துவதன் மூலம் கணக்காய்வுக்கான சூழல் ஒன்று புதிதாக அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
பணிகள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தி, நிதி முறைகேடுகளைத் தடுத்து நிதி தொடர்பில் ஒழுக்கமிக்கதும், விதிமுறைகளுக்கு அமைவாக பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயவர்த்தன மேலும் கூறினார்.

Related posts: