டெங்கு அதிபரிப்பு : நீதிமன்றம் எச்சரிக்கை!

Friday, October 27th, 2017

டெங்கு நுளம்பு உற்பத்தியாகக் கூடிய நீர் நிலைகளை வைத்திருப்பது குற்றமாகும். இவ்வாறான தவறுகள் இனிமேல் இடம்பெறுமாயின் குடியிருப்பாளர்களை சிறைக்கு அனுப்பத் தயங்கமாட்டேன் இவ்வாறு எச்சரிக்கை செய்த சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் குற்றவாளிகளுக்கு தலா 3 ஆயிரம் ரூபா வீதம் தண்டம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கமைய சாவகச்சேரிப் பகுதி சுகாதாரத் திணைக்களத்தினரால் கடந்த 16, 17 ஆம் திகதிகளில் டெங்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இரு தினங்களிலும் 53 பேருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதன்போது சாவகச்சேரிப் பொலிஸாரால் 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தலா 3 ஆயிரம் ரூபா வீதம் தண்டம் விதிக்கப்பட்டது.

மேலும் சாவகச்சேரி பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் மேலும் 19 பேருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.  வழக்குகளை விசாரித்த நீதிவான் குடியிருப்பாளர்களைக் கடுமையாக எச்சரித்து தலா 3 ஆயிரம் ரூபா வீதம் தண்டம் விதித்தார்.

கடந்த இரு தினங்களில் சாவகச்சேரி நீதிமன்றில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகக் கூடிய நீர்நிலைகளை வைத்திருந்த 30 பேருக்கு தலா 3 ஆயிரம் ரூபா வீதம் 90 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


QR முறைமையை பயன்படுத்துவது தொடர்பில் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டம் முன்னெடுப்பு!
வணிக வங்கிகள் இதுவரை வழங்கப்பட்ட கடன் வசதிகள் தொடர்பான வட்டி வீதத்தை அதிகரித்துள்ளதாக குறுஞ் செய்தி!
மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் ...