பதவி ஏற்ற முதலாம் ஆண்டு நிறைவு தொடர்பான நிகழ்வுகள் எதனையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் – ஜனாதிபதி அறிவுறுத்தல்!
Monday, November 16th, 2020
ஜனாதிபதியாக பதவி ஏற்று ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் அது தொடர்பிலான விழாக்கள் எதனையும் நடாத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக பதவியேற்று எதிர்வரும் 18ஆம் திகதி ஓராண்டு பூர்த்தியாகின்றது.
இதையடுத்து தமக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புவோர் எவ்வித நிகழ்வுகளையும் செய்ய வேண்டாம் எனவும், வீண் செலவுகளை செய்ய வேண்டாம் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றியீட்டினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி அனுராதபுரத்தில் வைத்து கோட்டாபய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


