பண்டிகைக்கால மோசடி தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம் – நுகர்வோர் அதிகார சபை தெரிவிப்பு!

Wednesday, April 7th, 2021

பண்டிகை காலத்தில் சந்தையில் நிலவும் மோசடி செயற்பாடுகள் தொடர்பாக 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் அறிவிக்குமாறு நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

அத்துடன் பண்டிகை காலப்பகுதியில் சந்தைக்கு வரும் காலாவதியான மற்றும் பயன்பாட்டுக்கு பொருத்தமற்ற பொருட்களை கண்டறிந்து அதற்கெதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்தும் நோக்கில் மார்ச் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதிவரை விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து அதிகாரிகளையும் ஈடுப்படுத்தி நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களில் தேடுதல் மற்றும் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதில் அதிகார சபை ஈடுப்பட்டுள்ளதாக சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சியசாலைகளை பரிசோதனை செய்வதற்காக முற்றுகையிடுவதாகவும் தெரிவித்துள்ள பணிப்பாளர் அசேல பண்டார காலாவதியான மற்றும் தகவல்களில் மாற்றம் செய்யப்பட்ட பொருட்கள் சந்தைக்கு வருவதை தடுப்பதே இதன் நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் சந்தையில் இடம்பெறும் மோசடி தொடர்பில் முறையிடுவதற்கு 1977 என்ற தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலயமும் செயற்படுவதாகவும், அலுவலக நேரங்களில் அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தள்ள பணிப்பாளர் அசேல பண்டார. அலுவலக நேரத்திற்கு பின்னர் நுகர்வோரின் தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்படுவதுடன் அதற்காக மீண்டும் அதிகாரிகள் தொடர்புகளை ஏற்படுத்தி பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: