பணிப்புறக்கணிப்பை கைவிட்டனர் எரிபொருள் புகையிரத சாரதிகள்!
Tuesday, November 27th, 2018
எரிபொருள் புகையிரத சாரதிகள் நேற்று(26) மாலை முதல் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு இன்று(27) காலை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புகையிரத முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
எரிபொருள் புகையிரத சாரதிகள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று இடம்பெற்ற சந்திப்பில் எரிபொருள் புகையிரத சாரதிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என புகையிரத செலுத்துனர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட குறிப்பிட்டார்.
Related posts:
எரிபொருள் பௌசர்களைக் கண்காணிப்பதற்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பம் - அமைச்சர் அர்ஜுண!
வாகனங்களின் விலை திடீரென அதிகரிப்பு!
ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் 2 இலட்சத்து 28,611 விவசாயக் குடும்பங்களுக்கு இலவச யூரியா உரம் - சாவ...
|
|
|


