பசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் போராட்டம்: தீர்வு காணுமா நகராட்சி மன்றம்!
Monday, May 21st, 2018
பசுக்கள் வதை செய்யப்படுவதற்கு எதிராகவும் இறைச்சிக்காக வெட்டப்படுவதற்கு எதிராகவும் தென்மராட்சி பொது அமைப்புக்கள் சில சாவகச்சேரியில் கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்தன.
இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன் ஆரம்பித்து நகரசபையை சென்றடைந்தது. பசுக்களை வதைக்காதே, இறைச்சிக்காக பசுக்களை வெட்டுவதை தடை செய், இறைச்சிக்கடைகளை நிரந்தரமாக மூடு போன்ற கோசங்களை கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் எழுப்பியிருந்தனர்.
இதன்போது சாவகச்சேரி பிரதேச செயலருக்கும் நகராட்சி மன்றத் தவிசாளருக்கும் பசு வதைக்கு எதிராகவும் இறைச்சிக்கடைகளை நிரந்தரமாக மூடுமாறு கோரியும் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
Related posts:
விடுமுறை காலத்தில் விசேடமாக புகையிரதங்கள் சேவையிலீடுபாடு!
தவறிழைக்கும் நாணயமாற்றுநர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் ஆரம்பம் - இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க நிதி இல்லை - விவசாய இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
|
|
|


