பசுமை பொருளாதாரத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை உதவி!

Friday, January 20th, 2017

இலங்கையில் பசுமை பொருளாதாரம், பசுமை நிதிச் சூழல் என்பனவற்றை ஏற்படுத்தவதற்கான நிபுணத்துவ ஆலோனையை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் சுற்றாடல் வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் எரிக் சொல்ஹைம் ஆகியோருக்கு இடையில் சுவிஸ்சர்லாந்தில் நேற்று இடம்பெற்றது.

வனாந்தரங்களை விஸ்தரிப்பது பற்றி கவனம் செலுத்தப்பட்டதுடன் அபிவிருத்திப் பணிகளுக்காக காடுகளை சுவீகரிக்கும்போது, அதற்குப் பதிலாக சம அளவிலான காடுகளை ஏற்படுத்துவது அவசியம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக ஐக்கிய நாடுகள் சுற்றாடல் வேலைத் திட்டம் போதுமான ஒத்துழைப்பை வழங்கும் என்று அங்கு கருத்து வெளியிட்ட எரிக் சொல்ஹைம் சுட்டிக்காட்டினார். யானைகள், திமிங்கிலங்கள், டொல்பின் என்பனவற்றை பாதுகாப்பதன் அவசியத்தையும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

b9b6d9f47d872c443f711e8832fbf045_XL

Related posts: