பங்களாதேஷின் ஏற்றுமதிக்காக கொழும்பு துறைமுகத்தை பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்!
Saturday, September 25th, 2021
பங்களாதேஷின் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்தை பாரிய அளவில் பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பங்களாதேஷுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தாரெக் இஸ்லாமுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும், விற்பனை செய்யும் இடங்கள் விசேட பரிசோதனைக்கு!
பல அரசியல் தலைவர்கள் தோல்வியடைந்துவிட்டனர் - கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
அதிக வெப்பம் : யாழ்ப்பாணத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீருக்கு நிதி ஒதுக்கீடு!
|
|
|


