பங்களாதேசத்தை கட்டியெழுப்ப அன்பும் அமைதியுமே தேவை – பங்களாதேச தேசிய கட்சித் தலைவர் கலிதா ஜியா தெரிவிப்பு!
Thursday, August 8th, 2024
பங்களாதேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப அன்பும் அமைதியுமே தேவை என்று சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள பங்களாதேச தேசிய கட்சித் தலைவர் கலிதா ஜியா தெரிவித்துள்ளார்.
அதன்படி நாம் இந்த நாட்டை வளமான நாடாக சீர்திருத்த வேண்டும் என்றும் இளைஞர்கள்தான் நமது எதிர்காலம். அவர்களின் கனவை நிறைவேற்ற, ஜனநாயக முறையில் பங்களாதேசத்தை புதிதாக கட்டமைக்க வேண்டும்.
இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.அத்துடன் அழிவு, கோபம், பழிவாங்கலுக்குப் பதிலாக நம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நமக்குத் தேவை அன்பும் அமைதியுமே என அவர் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
இதுவரை 2 இலட்சத்து 69 ஆயிரத்துக்கும் அதிகமான பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டுள்ளன – சுகாதார தொற்று நோய் பி...
தேர்தல் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு வன்னி பிரதேசவாசிகளுக்கு கால அவகாசம் - தேர்தல் ஆணைக்குழு ...
நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|
|


