பகிடிவதை: யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் அறுவருக்கு இடைக்காலத் தடை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1 ஆம் வருட மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்திய சிரேஷ்ர மாணவர்கள் 6 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது கடந்த பெப்ரவரி மாதம், பகிடிவதை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பாதிப்புக்குள்ளான தரப்பினர் முறைப்பாடு மேற்கொண்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
சட்டத்துறை புதுமுக மாணவர்கள் மீது பகிடிவதை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 3 மாணவர்களுக்கும், விஞ்ஞான பீட புதுமுக மாணவர்கள் மீது பகிடிவதை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 3 மாணவர்களுக்கும் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசாரணை முடிவில் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், குறிப்பிட்ட காலத்துக்கு பல்கலைக்கழகத்துக்கும் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
|
|