குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போட்டி!
Wednesday, March 11th, 2020
எதிர்வரும் பொதுத் தேரத்லில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனு பத்திரத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டுள்ளார்.
கொழும்பு விஜேராமையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பங்கேற்றிருந்ததாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார.
கடந்த பொதுத் தேர்தலிலும், தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் தாமதம் - ஆசிரியர் சங்கம் முறையீடு!
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டால் பாரிய நெருக்கடியைச் சகலரும் எதிர்கொள்ள நேரிடும் - சுகாதார அமைச...
நாட்டிற்கு 500 மில்லியன் டொலர்களை பெற்றுத்தர முடியாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன் - இராஜாங்க அமை...
|
|
|


