கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை மேன்முறையீட்டு நீதிமன்றினால் இரத்து!

Wednesday, May 3rd, 2017

காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(03) தீர்ப்பு வழங்கியுள்ளது.

காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்ய, இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று(03) அறிவிக்கப்பட்டது

கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளதால், அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, காலி மாவட்டத்தைச் சேர்ந்த, ஐந்து வாக்காளர்களால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

சுவிட்சர்லாந்தின் குடியுரிமையைக் கொண்ட அவரால், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என, கடந்த முறை இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பு, இன்றைய தினம் வழங்கப்பட்டுளள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: