பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு எதிராக 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!

பல்கலைக்கழகங்களில் பகிடி வதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
1998 ஆம் 20 ஆம் இலக்க சட்டத்திற்கு அமைவாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அவ்வாறு பகிடி வதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
பகிடிவதைக்கு எதிரான இந்த சட்டம் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவித்த அமைச்சர் இம்முறை முழுமையாக நடைமுறை படுத்தப்படும் என தெரிவித்தார்.
அத்துடன் அனைத்து பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
Related posts:
பட்டப்படிப்பை மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு கடன் வசதி!
தென்னிலங்கை வன்முறையில் மூவர் பலி!
13 ஆவது திருத்தம் குறித்து பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடுகள் சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்படும் - ...
|
|