பகிடிவதைக்கு எதிராக கடுமையான சட்டம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
Tuesday, August 7th, 2018
பல்கலைக்கழகங்கள் அல்லது வேறு உயர் கல்வி நிறுவனங்களில் பகிடிவதைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இவ்வாறான பகிடிவதைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்படும் மாணவர்களுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அந்த மாணவரை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் அல்லது உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களால் ஏனைய மாணவர்களுக்கு முன்னெடுக்கப்படும் கொடுமைகள், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள், உளவியல், உடல் ரீதியான தாக்கங்கள் அல்லது பாலியல் துன்புறுத்தல்கள், வன்முறைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 0112-123700 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்வதுடன் அருகிலிருக்கும் பொலிஸ் நிலையங்களில் உடனடியாக முறைபாடு செய்ய முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
|
|
|


