நேர்மறையான மாற்றத்திற்கு ஊடகவியலாளர்கள் தயாராக வேண்டும் – ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அழைப்பு!

பாரம்பரிய ஊடகவியலாளர்கள் பணிகளுக்கு அப்பால் தகவல் முகாமைத்துவத்தின் மீது கவனம் செலுத்தும் பொறுப்பு ஊடகவியலாளர்களைச் சாரும் என்று ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அத்துடன் தரவுகள் மற்றும் தகவல்களை உள்ளடக்கிய நேர்மறையான மாற்றத்திற்கு ஊடகவியலாளர்கள் தயாராக வேண்டுமென்றும் ஊடகத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
றுஹுணு பல்கலைக்கழகமும் – தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த ஊடக கற்கையைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வின்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தரமான படைப்பாற்றல் மிக்க அபிவிருத்தியுடன் கூடிய ஆளணி மூலதனம் நாடொன்றின் முன்னேற்றத்திற்கு அவசியமானதாகும்.
பாரம்பரிய ஊடகவியலாளர்கள் பணிகளைத் தாண்டிய தகவல் முகாமைத்துவத்தின் மீது கவனம் செலுத்தும் பொறுப்பு ஊடகவியலாளர்களைச் சாரும் என்று அமைச்சர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|