நேரம் மாறுகின்றது: வட மாகாண மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !
Saturday, November 19th, 2016
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்படி, காலை 07.30 மணிக்கு பாடசாலைகளை ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 01.30 மணிக்கு முடிவடையும் என வடமாகாண கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வட மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் சீராக ஒரே நேரத்தில் இயங்க செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, வட மாகாணத்தில் இயங்கும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகள் அனைத்தையும் 2017.01.02 முதல் காலை 07.30 மணி தொடக்கம் பிற்பகல் 01.30 மணி வரை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
தனியார் சுகாதார சேவை ஒழுங்குமுறை சட்டமூலத்தில் திருத்தம்!
மாகாணசபை தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை!
யாழ் மாவட்ட செயலகத்தில் உளவளத்துணை டிப்ளோமா கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு!
|
|
|
பாடசாலை மாணவர்களுக்கான உயர் போஷாக்கை கொண்ட அரிசி - கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்!
கடந்த ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டிருந்த நகர அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு துறைசார் அதிகா...
நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் முழுமையாக தீர்க்கப்படும் - க...


