நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் அதிகமானோருக்கு சிகிச்சை!

Wednesday, August 2nd, 2017

மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் இலவச மருத்துவ சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளார்கள் என்று வைத்தியசாலையின் தலைவர் டொக்டர் அஜித் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

நோயாளர்களுக்கு தேவையான மருந்து வகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. நிபுணத்துவ வைத்திய சேவையும் வழங்கப்படுகிறது. ஆளணி வளம் தொடர்பில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வுகாணப்படும  தலைவர் டொக்டர் அஜித் மென்டிஸ்   கூறினார். வைத்தியசாலையில் 600 கட்டில்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் போதனா வைத்தியசாலையாக இது முன்னெடுத்துச் செல்லப்படவிருக்கிறது.

Related posts:

ஈ.பி.டி.பியின் முயற்சியால் கிளிநொச்சி மாவட்ட இ.போ.ச.சாலை, பேருந்து தரிப்பிட பிரச்சினைகளுக்குத் தீர்வ...
நிவாரண உதவிகளை அனுப்பிவைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித...
இலங்கைக்கு ரஷ்ய எண்ணெய்க்கான தள்ளுபடி விலை ஏனைய நாடுகளுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது - வெளிவிவகார ...