நெற்பயிர்களை மூடிக் களைகள்: விவசாயிகள் கவலை!
Thursday, November 22nd, 2018
வலி.மேற்கிலும், வலி.தென்மேற்கிலும் களைகள் என்றுமில்லாதவாறான வகையில் நெற்பயிர்களை மூடி வளர்ந்துள்ளன என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
நெற்சப்பி, கோழிச்சூடன், நெற்பவனம், குதிரைவில் மற்றும் கோரை என பல களைகள் நெற்பயிர்களை மூடியுள்ளன.
மேற்படி களைகளை கடந்த காலங்களில் பிடுங்கி அழித்தது போன்று தற்போதும் பிடுங்கி அழிப்பதற்கு பொருத்தமான பெண் கூலிகளை விவசாயிகள் பெறமுடியாத நிலையேற்பட்டுள்ளது.
வெவ்வேறு புதிய பெயர்களில் களை கொல்லிகள் வந்த போதிலும் மேற்படி களை கொல்லிகளால் களைகளை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Related posts:
நவீன லேசர் வெசாக் இலங்கையில்!
விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
புகையிரத விபத்து சம்பவங்கள் அதிகரிப்பு!
|
|
|


