நெருக்கடி நிலை சில தினங்களில் நிவர்த்தி செய்யப்படும் – விசேட மருத்துவ நிபுணர் உறுதி!
Tuesday, May 4th, 2021
கொரோனா தொற்று அதிகரத்ததை அடுத்து நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் நெருக்கடி நிலை இன்னும் இரண்டு மூன்று தினங்களில் நிவர்த்தி செய்யப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பத்து தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று நோயாளிகளாக இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் இத்தினங்களில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்வரும் இரண்டு மூன்று தினங்களில் வைத்தியசாலைகளில் நிலவும் நெருக்கடி நிலைமை நிறைவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முகாமைத்துவத்தை நீக்க வேண்டும் - விமான நிறுவன தொழிற்சங்கங்கள்!
5 விநாடிகள் முகக்கவசமின்றி இருப்பது ஆபத்து - மருத்துவர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை!
போர் என்பது வெற்றியல்ல – அது மனித குலத்தினது தோல்வியாகும் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக...
|
|
|


