நெருக்கடி நிலையிலும் மருந்துகள் மீதான கட்டுப்பாட்டுவிலை நீக்கப்படாது – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு!

Tuesday, January 18th, 2022

அந்நிய செலாவணி நெருக்கடியால் ஏற்பட்ட சிரமங்களுக்கு மத்தியிலும், இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளுக்கள் மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருந்துகளுக்கள் மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது பெரும்பாலான மக்கள் மீது பாரிய சுமையை ஏற்படுத்தும் எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டிற்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான மருந்துகளை இறக்குமதி செய்யும் இலங்கை மருந்துத் தொழிற்துறை சம்மேளனம், இதற்குரிய நடவடிக்கையை எடுக்காதுவிட்டால் தொழில்துறை வீழ்ச்சியடையக்கூடும் எனவும் எச்சரித்தது.

இதனை அடுத்தது அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடிய அமைச்சர், மருந்துகளுக்கள் மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்ததாக கூறியுள்ளார். மேலும் சுகாதார அமைச்சு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என அறிவித்துள்ள அதேசமயம் சில மருந்துகள் பற்றாக்குறை இருப்பதாகவும் நிலைமை மோசமாகலாம் என்றும் இலங்கை மருந்துத் தொழிற்துறை சம்மேளனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: