நெருக்கடியான காலக்கட்டத்தில் நாட்டிற்கும் மக்களுக்கும் சேவையாற்றும் ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் – அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க வண. ஆனமடுவே தம்மதிஸ்ஸி தேரர் நாட்டு மக்களிடம் கோரிக்கை!
Wednesday, August 30th, 2023
நெருக்கடியான காலக்கட்டத்தில் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பாரிய சேவையாற்றும் ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டுமென அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க வண. ஆனமடுவே தம்மதிஸ்ஸி தேரர் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். –
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று கண்டிக்கு விஜயம் செய்த போது, மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வரலாற்றுத் தலங்களைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியிருந்தோடு, வடக்கு , கிழக்கில் ஏற்படும் மத ரீதியான சிக்கல்களை தீர்க்கும் நோக்கில், அந்தந்த மாகாணங்களைச் சேர்ந்த மதத் தலைவர்களின் தலைமையிலான குழுக்களை நிறுவ உள்ளதாகவும் தெரிவித்தார்
இந்நிலையிலேயே அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க வண. ஆனமடுவே தம்மதிஸ்ஸி தேரர் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றம்!
அனைத்து தேர்தல்களும் கலப்பு மற்றும் விகிதாசார முறையில் இடம்பெறும் - பிரதமர்
சோள பயிர்ச் செய்கையை மீளவும் மேற்கொள்ளுமாறு கோரிக்கை!
|
|
|


