தேர்தல் சட்டங்களை மீறிய குற்றம் தொடர்பில் இதுவரையில் 1255 முறைப்பாடுகள் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
Monday, July 6th, 2020
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 1255 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வன்முறை, அரச சொத்தக்களை ஆக்கிரமித்தல், சட்டவிரோதமான முறையில் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தேர்தல் சட்டங்களை மீறிய வேட்பாளர்கள் இருவர் உட்பட 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூரிய ஆயுதத்துடன் களுத்துறை பிரதேச சபை பிரதி தலைவரை மிரட்டிய சம்பவம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும்!
உக்ரைன் மீதான போர் விவகாரம் - ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்பில் ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை!
விவசாயத்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கு நீண்ட காலம் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்குவதில்லை – வி...
|
|
|


