நெருக்கடிக்கு மத்தியில் மின் கட்டணம், எரிவாயு மற்றும் எரிபொருள் கட்டணங்கள் தற்போது அதிகரிக்கப்பட மாட்டாது – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவிப்பு!

Tuesday, March 29th, 2022

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் மின் கட்டணம், எரிவாயு மற்றும் எரிபொருள் கட்டணங்கள் தற்போது அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சரவையால் எடுக்கப்பட்ட 3 முக்கிய தீர்மானங்கள் இந்த கூட்டத்தின் போது நிதி அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பண்டிகைக் காலத்தில் குறைந்த வருமானம் பெறும் 3.1 மில்லியன் குடும்பங்களை அடையாளம் கண்டு, 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரயில் கட்டணங்களை திருத்துவதற்கு இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை, மின் கட்டணங்கள், எரிவாயு விலைகள் மற்றும் எரிபொருட்களின் கட்டணங்கள் தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: