உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு தண்டனைகளை அறிவிக்க முடியாது – அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Monday, March 1st, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தாக்குதலை மேற்கொண்டவர்களிற்கான தண்டனைகளை தீர்மானிப்பதற்கான அதிகாரமில்லை என அமைச்சர் ஜிஎல்பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது கூடியவிரைவில் பொதுஜனபெரமுன தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் எனவும்  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நிலைப்பாட்டிற்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும் வேறுபாடுள்ளது எனவும் தெரிவித்துள்ள  அமைச்சர் ஆணைக்குழுவிற்கு நீதித்துறை அதிகாரங்கள் இல்லாததால் அது தண்டனைகளை பரிந்துரை செய்யமுடியாது ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை சுமத்துவார்  என்றும் நீதிமன்றமே தண்டனைகளை தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறிப்பிட்ட அறிக்கையின் அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களமும் சிஐடியினரும் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளன என தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் அறிக்கை முழுமையானதில்லை ஆனால் முக்கியமானது எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என தெரிவித்து எதிர்வரும் 07 திகதியன்று கறுப்பு ஞாயிறு தினமமாக அறிவிக்க கொழும்பு மறைமாவட்ட பேராயர்கள் தீர்மானித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழநத மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காமைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்பு ஞாயிறு தினம் பிரகடனப்படுத்தப்படுவதாகவும், அன்றைய தினம் கத்தோலிக்க மக்கள் கறுப்பு ஆடைகளை அணிந்து பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: