நெதர்லாந்து கடற்பகுதியில் சரக்குகள் கப்பலொன்றில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

ஜேர்மனியிலிருந்து – எகிப்து நோக்கி பயணித்த சரக்குகள் கப்பலொன்று நேற்று (26) நெதர்லாந்து கடற்பகுதியில் வைத்து தீ விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் மூவாயிரம் வாகனங்களுடன் பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன், இதுவரை தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என அந்த நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் காரணமாக, தீ பற்றியிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன், தீ விபத்துக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் நாளை!
48 மணிநேர சேவைப்புறக்கணிப்பு போராட்டம்!
வருடத்தின் முதல் 10 மாதங்களில் 5156 பேர் கண் தானம் - தேசிய கண் மருத்துவ சங்கம் தெரிவிப்பு!.
|
|