நெடுந்தீவு பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Monday, January 9th, 2017

நெடுந்தீவு பிரதேசத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாகத்தினரிடம் குறித்த பகுதி பொது அமைப்புகள் விடுத்திருந்த கோரிக்கைக்க அமைவாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் கீழ்  குறித்த அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இன்றையதினம் நெடுந்தீவு  பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) கலந்துகொண்டு குறித்த அமைப்புகளின் நிர்வாகத்தினரிடம் உபகரணங்களை வழங்கிவைத்தார்.

இதன்போது சென்.ஜோன்ஸ் விளையாட்டுக்கழகம், வலம்புரி கடற்தொழில் கூட்டுறவு சங்கம், வளர்மதி விளையாட்டுக் கழகம், உதய சூரியன் விளையாட்டுக் கழகம், ஐக்கிய தீபம் விளையாட்டுக் கழகம், ஸ்டார் விளையாட்டுக்கழகம், சென் அன்ரனிஸ் இளைஞர் கழகம், சென்.அன்ரனி விளையாட்டுக்கழகம் ஆகிய விளையாட்டுக் கழகம் ஆகிய விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வலம்புரி மகளிர் சங்கத்திற்கான சுய தொழிலுக்கான உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கட்சியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாக செயலாளர் முரளி மற்றும் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.

unnamed (3)

unnamed (6)

unnamed (5)

unnamed (2)

Related posts: