நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்தின்போது சமுத்திர தேவி படகு இடை நடுவில் பழுது!
Wednesday, January 5th, 2022
நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்து சேவை இடம்பெற்றபோது பாரிய அசம்பாவிதம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது.
இன்று காலை 100 ற்கு மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திர தேவி படகு இடை நடுவில் பழுதடைந்த நிலையில் பின்னர் வடதாரகைப் படகின் உதவியுடன் குறிகட்டுவான் நோக்கி இழுத்து செல்லப்பட்டது.
சுக்கான் தடி உடைந்தமையினால் இடைநடுவில் பயணிகளை வடதாரகைப் படகிற்கு மாற்ற முடியாத நிலையிலும் பல இடையூறுகள் மத்தியிலும் வடதாரகைப் படகு இழுத்து செல்லப்பட்டது.
காலை 07.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்ட மக்கள் காலை 10.00 மணியினை அண்மித்தே குறிகட்டுவான் இறங்கு துறைமுகம் வந்து சேர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அவசர நோயாளிகளுக்கு மட்டுமே அனுமதி - மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளார் அறிவிப்பு!
இந்தியாவின் உதவியுடன் திருமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் பிரதமர் மோடியுடன் ஜனாத...
"திருநங்கைகளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே" - ஊடகவியலாளர் பிரதீபன் வீடு மீது தாக்குதல்!
|
|
|
ஜுன் முதல் வாரத்தில் அனைத்து பாடசாலைகளையும் திறக்க தீர்மானம் என்ற செய்தியில் எதுவித உண்மையும் கிடையா...
பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்க தீர்மானம் - ஆணைக்குழு அனுமதி வழங்கினால் தொடர் மின்சார...
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பானமையுடன் நிறைவேற்றுவதற்கு சில சரத்துகள...


