பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்க தீர்மானம் – ஆணைக்குழு அனுமதி வழங்கினால் தொடர் மின்சாரம் வழங்கவது குறித்தும் நடவடிக்கை – அமைச்சர் காஞ்சன தெரிவிப்பு!

Sunday, January 29th, 2023

பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக்க ரத்னநாயக்கவை நீக்குவதற்கு அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே

புதிய மின் கட்டண திருத்தத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கினால், அன்றையதினம்முதல் இலங்கை மின்சார சபை தொடர்ந்து மின்சாரத்தை வழங்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (29) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“ஜனவரி 1 முதல் தொடர் மின்சாரம் வழங்குவதற்கான திட்டங்களை சமர்ப்பித்தோம். பொதுப் பயன்பாட்டு ஆணையம் தரவில்லை. அனுமதி கிடைத்தால், நாளைமுதல் தொடர்ந்து மின்சாரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: