நுவரெலியாவில் புதிய உயரமான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு தடை – அமைச்சரவையும் அங்கீகாரம்!

நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நான்கு மாடிகளுக்கு மேற்பட்ட கட்டிடங்களை நிர்மாணிப்பதை மட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் விதிகளின் கீழ் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
நுவரெலியா நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் முறைசாரா அபிவிருத்தியின் விளைவாக நகரத்தின் கவர்ச்சி படிப்படியாக குறைந்து வருவதாகவும் அது சுற்றுலாத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி விக்கிரமசிங்க அண்மையில் கவலை வெளியிட்டார்.
எனவே, பிரதேசத்தில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குத் தேவையான சூழலை உருவாக்குவதற்காக விரிவான சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிக்க வேண்டிய தேவை இருப்பதால், அதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|