நுளம்பு பரவும் இடங்களைத் துப்பரவு செய்ய நடவடிக்கை – கல்வி அமைச்சு!

பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் நுளம்பு பரவும் இடங்களைத் துப்பரவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அடுத்தாண்டு ஆரம்பமாவதற்கு முன்னர் நுளம்பு பரவும் இடங்களைத் துப்பரவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மீண்டும் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதால், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் நுளம்பு ஒழிப்பு செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கும் தபால் ஊழியர்கள்.!
நல்லூரில் சிறப்புற நடைபெற்ற சூரன் போர்!
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்ப...
|
|