நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கை – யாழ் மாநகர பிரதேசத்தில் 2 ஆயிரத்து 447 வீடுகள் சோதனை!

Thursday, January 3rd, 2019

யாழ்ப்பாண மாநகர பிரதேசங்களில் இடம்பெற்ற இருநாள் சிறப்பு நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 2 ஆயிரத்து 447 வீடுகள் சோதனையிடப்பட்டுள்ளன.

கடந்த 27 ஆம் திகதி ஜே. 76, 78, 83, 84, 86 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கையின்போது அங்கு ஆயிரத்து 147 வீடுகள் சோதனையிடப்பட்டன.

இந்த சோதனையின்போது 17 வரையான வீட்டு சுற்றாடல்களில் நுளம்பு குடம்பிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்  எடுக்கப்படவுள்ளன. அத்துடன் போதிய சுகாதார வசதிகள் இன்றி காணப்பட்ட 87 வரையிலான குடியிருப்பு சுற்றாடல்கள் உடனடியாக துப்புரவு செய்யக்கோரி சிவப்பு அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

மறுநாள் ஜே.92, 100, 101, 105, 108 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் ஆயிரத்து 300 வரையான வீடுகள் சோதனையிடப்பட்டன. இதில் 19 இடங்களில் குடம்பிகள் காணப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சுகாதார சீர்கேடாக சுற்றாடலை வைத்திருந்த 103 பேருக்கு உடனடியாக துப்புரவு செய்ய கோரி சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: