நீதிபதியின் மெய்பாதுகாவலரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார் பிரதமர்
Monday, July 24th, 2017
நல்லூர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல்.நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் ஹேமசந்திர என்பவர் உயிரிழந்த சம்பவத்துக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுதாபம் தெரிவித்துள்ளார்.
“பணியிலிருக்கும் போது, சார்ஜன்ட் உயிரிழந்துள்ளமை சோகத்துக்குரிய விடயமே. இந்தக் கடினமான நேரத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு, ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஐ.எஸ் பயங்கரவாதியாக செயற்பட்ட இலங்கையர் பலி - பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை!
பிரதமர் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கட்சி தலைவர்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்து...
|
|
|


