நிலவும் சீரற்ற காலநிலை – மூன்று தொற்று நோய்கள் நாட்டின் பல பகுதிகளில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை!

Monday, October 23rd, 2023

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன், தற்போது மூன்று தொற்று நோய்கள் நாட்டின் பல பகுதிகளில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

சில பகுதிகளில் கண் நோய், வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறுகளுடன் கூடிய காய்ச்சல் போன்றவை பதிவாகி வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலைமைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் தமது சுகாதாரப் பழக்கவழக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதனிடையே நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது டெங்கு தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 66 ஆயிரத்து 476 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: