அமைச்சர் பிரசன்னவுக்கு சிகிச்சை வழங்க மறுப்பு – இலங்கை மருத்துவ சபை ஆராய்வு!

Monday, May 9th, 2022

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு, வைத்தியரினால் சிகிச்சை வழங்க மறுக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றால், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான எவ்வித முறைப்பாடுகளும் தமக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என இலங்கை மருத்துவ சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் குறித்த வைத்தியர் தமது ஒழுக்க விதிகளை மீறியமை உறுதிப்படுத்தப்பட்டால், அவரது அனுமதிப்பத்திரத்தினை இரத்து செய்யவதற்கும், சேவையில் இருந்து இடைநிறுத்துவதற்கும் வாய்ப்புள்ளதாக இலங்கை மருத்துவ சபையின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அண்மையில் லங்கா தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெறுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சென்றிருந்த போது, வைத்தியர் ஒருவரால், சிகிச்சை வழங்க மறுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில், லங்கா வைத்தியசாலை விடுத்துள்ள அறிக்கையில், வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கும், நிராகரிப்பதற்குமான உரிமை வைத்தியருக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

எனினும் வைத்தியசாலையினால் எந்தவொரு நோயாளர்களையும் நிராகரிக்க முடியாது. வைத்தியசாலை நிர்வாகமே நிராகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனை மறுப்பதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் எந்தவொரு மருத்துவரின் சேவையும் இடைநிறுத்தப்படவில்லை என லங்கா வைத்தியசாலை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: