நிறுத்தப்பட்ட சமுர்த்தி உதவித்திட்டத்தை பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பி கட்சியிடம் பாதிக்கப்பட்ட பருத்தித்துறை பயனாளிகள் கோரிக்கை!

Thursday, August 3rd, 2017

மிக வறிய நிலையில் வாழும் தங்களுக்கு இதுவரைகாலமும் வழங்கப்பட்டுவந்த சமுர்த்தி உதவித்திட்டத்தை, தற்போது மீளாய்வு என கூறி நிறுத்தியுள்ளமையால் தாம் பெரும் பாதிப்புக்ளுக்காகியுள்ளதாகவும் குறித்த மீளாய்வு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமக்கு மீளவும் அத்திட்டத்தை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுதருமாறும்  பருத்தித்துறை நகரத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சமுர்த்தி பயனாளிகள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்சியின் குறித்த பகுதி நிர்வாக செயலாளர் இரட்ணகுமாரிடம் தமது பிரச்சினைகளை எடுத்துக்கூறிய மக்கள் தமக்கு குறித்த திட்டத்தை பெற்றுத் தந்தது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தான் என்றும் அனால் தற்போது நல்லாட்சி என்ற போர்வையில் அது மீளாய்வுக்குட்படுத்தப்பட்டு பாரபட்சம் காட்டி தங்களை அத்திட்டத்திலிருந்து நிறுத்தியுள்ளதாகவும் இதற்கான தீர்வை பெற்றுத்தருமாறும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த மீளாய்வு காரணமாக பாதிக்கப்பட்ட பயனாளிகளின் கோரிக்கைகளை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகள் பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மெற்கொள்வதாக பாதிக்கப்பட்ட பயனாளிகளிடம் பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் இரட்ணகுமார் தெரிவித்தள்ளார்.

இதனிடையே இன்றையதினம் தமது நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு சென்ற 50 மேற்பட்ட பாதிக்கப்பட்ட பயனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் அவர்களை குறித்த பிரதேச செயலர் சந்தித்து பேச்சுக்களை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: