நிர்மாணத்துறையில் பிரச்சினை – உரிய முறையில் ஆராய்ந்து தீர்வுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதியால் நிபுணர் குழு நியமனம்!
Friday, March 15th, 2024
நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உரிய முறையில் ஆராய்ந்து தற்போதைய பொருளாதார நிலைமையில் அந்த பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிர்மாணத்துறையில் உள்ள கைத்தொழில்துறையினருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு என்பவற்றின் செயலாளர்களை உள்ளடக்கும் வகையில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஈ.பி.டி.பியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களுக்கான அறிமுகமும்!
அபாயகரமான சாலை விபத்துக்களைக் குறைப்பதற்காக இன்றுமுதல் வாகனங்களின் டயர்களின் தரம் குறித்து சோதனை - ...
சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிற்கு செல்லும் கர்ப்பிணி தாய்மாருக்கு எரிபொருள் வழங...
|
|
|


