நிரந்தரமான ஒரு வீட்டை அமைப்பதற்கான முயற்சிகளை நம்பிக்கையுடன் முன்னெடுங்கள் – “கிராமத்திற்கு ஒரு வீடு” வீட்டுதிட்ட காசோலை வழங்கும் நிகழ்வில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் பாலகிருஸ்னன்!

Saturday, December 12th, 2020

கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிரந்தரமான ஒரு வீட்டை அமைப்பதற்கான முயற்சிகளை பயனாளிகள் நம்பிக்கையுடன் முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் (NHDA) “கிராமத்திற்கு ஒரு வீடு” வீட்டுதிட்ட காசோலை வழங்கும் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் மகேசன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதி சிவகுரு பாலகிருஸ்னன் மற்றும் துறைசார் அதிகாரிகள் ஆகியோரது பிரசன்னத்துடன் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மேலும் தெரிவிக்கையில் –

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்திற்கமைய நடைமுறைப்படுத்தும் திட்டங்களில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த வீட்’டு திட்டத்தை கடந்த நல்லாட்சியாளர்கள் தமது சுயநல அரசியலுக்காக பயன்படுத்தியதால் இன்று பலர் அதை கட்டிமுடிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால் ஜனாதிபதி கோபட்டபய ராஜபக்சவின் தலைமையில் பிரதமர் மஹஜந்த ராஜபக்சவின் வழிகாட்லில் தற்போது இந்த வீட்டு திட்டத்திற்கான கட்டுமாணப்பணிகளுக்கு முற்பணமாக நிதி கொடுக்கப்பாட்டு வீடுகளை கட்டும் பணி முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் மக்களின் மீது சுமத்தப்பட்ட சுமையும் குறைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி மத்திய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தம் அந்த அரசுடன் இணைந்து செயற்படும் அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களூடாகவே ஒவ்வொரு பிரதேசத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அவ்வாறான நடைமுறையே எமது மாவட்டமான யாழ்ப்பாணத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இன்று இந்த தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் வழங்கப்படும் வீடுகள் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒருவருக்கு என்ற ரீதியில் வழங்கப்பட்டுள்ளது.ஆனாலும் இந்த வீட்டுத்திட்டத்திற்கு வழங்கப்படும் நிதி பயனாளிகளுக்கு போதாதுள்ள நிலைமை காணப்படுகின்றது. ஆனாலும் கிடைக்கின்ற இந்த சந்தர்ப்பத்தை பெற்று ஒரு வீட்டை அமைப்பதற்கான முயற்சிகளை பயனாளிகள் நம்பிக்கையுடன் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே குறித்த கிராமத்துக்கு ஒரு பயனாளி என்ற ரீதியில் வழங்கப்பட்டவரும் இந்த திட்டத்தில் யாழ் மாவட்டத்தில் 435 வீடுகள் அமைக்கப்படவுள்ள நிலைலயில் இன்று  55 பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 ஆவது கட்டமாக வழங்கப்பட்ட இந்த 55 பயனாளிகளுடன் யாழ் மாவட்டத்தில் இதுவரை 395 பயனாளிகள் இந்த வீடமைப்பு திட்டத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: