நிதி மோசடி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு!

கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது மத்திய வங்கியில் இருந்து பெறப்பட்ட ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்
நிதி அமைச்சில் நேற்று(15) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் பாரிய அளவான நிதியை சிலர் கொண்டுச் சென்றனர்.
இந்த நிதி பாரவூர்தியின் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பில் உரிய காவற்துறை பிரிவுகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
நாட்டின் பொருளாதாரம் நவீனமயப்படுத்தப்படும் - பிரதமர்!
கொரோனா சிகிச்சை முறை எதற்கும் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை – உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு!
பொருத்தமற்ற நெல்லை கொள்வனவு செய்தமை தொடர்பில் இரு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்!
|
|