நிதியமைச்சின் மௌனம் தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை குற்றச்சாட்டு!
Wednesday, December 21st, 2016
உள்ளூர் சந்தையில் கண்மூடித்தனமாக அதிகரித்துவரும் அரிசி விலைகள் பற்றியோ அதனைக் கட்டுப்படுத்துவது பற்றியோ நிதியமைச்சு இதுவரை தங்களுக்கு எந்தவிதமான அறிவித்தலையும் தரவில்லையென நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்திருக்கிறது.
உள்ளூர்ச் சந்தையில் அரிசியின் கட்டுப்பாட்டு விலைகள் பற்றி எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வியாபாரிகள் தங்களது இஷ்டத்துக்கு விலைகளை உயர்த்தி வருவதாகவும் அதனால் பொதுமக்கள் திக்குமுக்காடி வருவதாகவும் அச்சபையின் உயரதிகாரியொருவர் விசனம் தெரிவித்தார். கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயம் செய்வது நிதியமைச்சின் பொறுப்பாகும் எனவும், அவ்வாறு செய்யாத பட்சத்தில் தங்களால் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:
முறிகண்டியில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்!
புரவி புயலால் நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கு ஈ.பி.டி.பியின் மனிதாபிமான பணிகள் தீவி...
கோணாவில் கிழக்கு ராஜன் குடியிருப்பு மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் குடிநீர்வசதி...
|
|
|


