நிகழ்நிலையில் நடைபெறும் பட்டமளிப்பை நிராகரிக்கின்றோம் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு!

Monday, September 20th, 2021

நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பை முழுமையாக நிராகரிக்கின்றோமென யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையிலே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் –

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பட்டமளிப்பு விழா பகுதி இரண்டானது செப்டம்பர் 16,17,18 ஆம் திகதியில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும் தற்போதைய கொரோனா ஊரடங்கு காரணமாக ஒக்டோபர் 7,8,9 ஆம் திகதிகளில் நடாத்துவதாக பிற்போடப்பட்டது.

எனினும் அந்த திகதிகளில் மாணவர்களை நேரில் அழைத்து பட்டமளிப்பை நடாத்துவதற்கு சுகாதார அமைச்சினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஒக்டோபர் 7 ஆம் திகதி நிகழ்நிலையில் நடாத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

எனினும் இத் தீர்மானம் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விருப்பமின்மை காணப்படுகின்றது.

இதுதொடர்பாக நாம் 15.9.2021 அன்று துணைவேந்தருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம். எனினும் துணைவேந்தரிடம் இருந்து சாதகமான பதில் எமக்கு கிடைக்கவில்லை.

எனவே நாடு முழுவதும் வழமைக்கு திரும்பிய பின்னர் நேரடியாக பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கே மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எனவே பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலையில் நடத்தாமல் நேரடியாக மாணவர்களை அழைத்து பட்டமளிப்பு விழாவை நடாத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தை கோருகின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நோயாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நடவடிக்கை - கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் அ...
முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை அமைத்துக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு - அமைச்சர் ரமேஷ் பத்திரன ...
நேர மாற்றத்துடன் எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் பாடசாலைகள் ஆரம்பம் - பாட திட்டத்தை முழுமையாக உள்ளடக்க...

 உங்களது கோரிக்கையை நிறைவுசெய்ய முயற்சிக்கின்றேன் – முன்னாள் காரைநகர் பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர்...
கொரோனா தொற்று : இலங்கையில் 98 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - தேசிய உளவுத்...
இரு நாடுகளினதும் உறவுகளை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார் இந்திய த...