நாளை தீபத் திருநாள் – யாழ்ப்பாணத்தில் சிட்டி வியாபாரம் மும்முரம்!
Wednesday, November 17th, 2021
இந்துமக்களால் அனுஷ்டிக்கப்படும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிட்டி வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.
தமிழர்கள் தொன்றுதொட்டுக் கொண்டாடிவருகின்ற விழாக்களுள் ஒன்றான கார்த்திகைத் தீபத் திருநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தையான திருநெல்வேலி பொதுச் சந்தையை அண்டியுள்ள பகுதிகளில் வியாபாரிகள் சிட்டி வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருவதைக் காண முடிகின்றது.
தமது வீடுகளிலும், ஆலயங்களிலும் தீபமேற்றி வழிபடுவதற்காக மக்கள் பலரும் ஆர்வத்துடன் சிட்டிகளைக் கொள்வனவு செய்து செல்கின்றனர்.
சிட்டிகள் பல்வேறு வடிவங்களிலும், பல வர்ண நிறங்களிலும் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்தத் தீர்மானம் – அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
பேருந்துகளில் அதிக கட்டணம் அறவிடப்பட்டால் 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு அறிவிக்கவும் - தேசிய போக...
இலங்கையின் பொதுப் போக்குவரத்து அபிவிருத்திக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் - இந்திய போக்குவரத்...
|
|
|


