நாளையுடன் பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Thursday, May 19th, 2022
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளளுக்கு நாளையுடன் (20) முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளமதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, 2 ஆம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி திறக்கப்படுமென கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் இவ்வருடத்திற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான முதற்கட்டப் பணிகள் நாளையுடன் (20) முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வற் வரி செலுத்த வேண்டியவர்கள் யார்?
வெள்ள நிவாரணப் பணிகளில் இராணுவம்!
பொலிஸ் உத்தியோகத்தர் பிரதாபனினின் பூதவுடலுக்கு மேல்மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து த...
|
|
|


