பகுதிநேர கற்கைநெறிக்கான விசேட செயற்றிட்டம்!

Tuesday, November 29th, 2016

பகுதிநேர கற்கை நெறித்திட்டம் அநேக மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை யின் கிளிநொச்சி உதவிப் பணிப்பாளர் இரா.அகிலன் அறிவித்துள்ளார். இதற்கமைய குடிசார் படவரைகலை, குடிசார் கணிய அளவையியல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், தையல்கலை, அழகுக்கலை, சிகை அலங்காரம், கணணி வன்பொருள், கட்டட நிர்மானம், அலுமினியக் கட்டுமானம், நீர்க்குழாய் பொருத்துதல், வீட்டு மின்னிணைப்பு, வெல்டிங், வாகன திருத்துநர், மரப்பொறியியல் போன்ற துறைகளில் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

அரச, அரச சார்பற்ற மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் தற்போது தேசிய தரச் சான்றிதழ் கட்டாயப்படுத்தப்படுவதால் அவசரமாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை, மாவட்ட பணிமனை, பாஸ் வில்டிங், 155ம் கட்டை, ஏ-9 வீதி கிளிநொச்சி எனும் மகவரியில் விண்ணப்பங்களை பெற்று நிரப்பி அனுப்புமாறு அவர் கேட்டுள்ளார். இல்லையேல் 021 228 5686 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவலை பெற முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

c3(1)

Related posts: