நாளையதினம் உத்தியோகப்பூர்வ பயணமாக சீனாவிற்கு செல்கிறார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

Friday, June 23rd, 2023

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு நாளையதினம்(24) சீனாவிற்கு செல்லவுள்ளார்.

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான குயின் கேங்கின் அழைப்பின் பேரில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 24 முதல் 30 ஆம் திகதி வரையில் சீனாவுக்கு விஜயம் செய்வார் என இலங்கைக்கான சீனத் தூதரகம் தமது டுவிட்டர் பதிவில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts:


காணி உரிமங்களை பெற்றுக்கொள்ள உதவி புரியுங்கள் - அரியாலை கிழக்கு பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியி...
இரணைதீவு விவகாரம்: டக்ளஸ் எம்.பி.யின் முயற்சியால் வருகைதரும் விஷேட குழுவை வரவேற்க தயாராகியுள்ள இரணைத...
கொரோனாவால் உயிரிழப்போரை தகனம் செய்யுமாறு நிபுணர் குழு பரிந்துரை - சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னிய...