சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மீண்டும் படையினருக்கு அழைப்பு!
Friday, September 23rd, 2022
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானியின் ஊடாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி செப்டம்பர் 22 2022 முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டின் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கடந்த சில மாதங்களாக பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பாக மாதாமாதம் 22 ஆம் திகதியன்று ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மருந்துகளின் விலை குறைப்பினால் அரசுக்கு 6 பில்லியன் ரூபா இலாபாம்!
அரசாங்கத்தின் செயற்பாடுகளை சீர்குலைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் : பழைய நாடாளுமன்றத்தை கூட்டி பணத்த...
எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள நேரிடலாம் - இலங்கைக்கு கோதுமையும் வழங்கவும...
|
|
|


