நாளைமுதல் வடக்கு, உள்ளிட்ட 4 மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

நாளை (04) முதல் வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த மாகாணங்களில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய மாகாணங்களின் பாடசாலை மாணவர்கள் தவணைப் பரீட்சைக்கு மாத்திரம் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
பால்மாவில் கொழுப்பில்லை - ஆய்வுகள் மூலம் உறுதி!
தேர்தல் முறையில் திருத்தங்களை செய்யும் யோசனை - 160 எம்.பிக்களை வாக்காளர்கள் நேரடியாக தெரிவு செய்ய ந...
இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகள் தொடரும் - அமெரிக்க சிறப்புத் தூதுவர் தெரிவிப...
|
|